தொடரும் சத்தியம் தொலைக்காட்சியின் நிவாரணப் பணிகள்

sa-rain3

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.கடந்த மாதம் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு சத்தியம் தொலைக்காட்சி சார்பாக இயன்ற அளவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சத்தியம் தொலைக்காட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. சென்னை ராயபுரத்தில் உள்ள நிர்மலா திசுபவன் இல்லத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில் அரிசி, மருத்துவ உபகரணங்கள்

ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. சத்தியம் தொலைக்கட்சியின் நிர்வாக இயக்குநர் ஐசக் லிவிங்ஸ்டன் அவர்கள் உதவிப்பொருட்களை வழங்கினார்.இதே போல சென்னை போரூரில் உள்ள லிட்டில் டிராப்ஸ் முதியோர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.